Categories
மாநில செய்திகள்

மூச்சுத்திணறலால் அவதிப்படும் சசிகலா… மருத்துவமனையில் அனுமதி…!

சிறையிலிருந்த சசிகலாவுக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனை காலம் முடிந்து, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன்பின் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதனை செய்தனர்.

அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மேலும் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |