சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவியும் வீடியோ பரபரப்பாக பட்டு வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிறகு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகிறார் .
ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை செய்ததால் இவ்வாறு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அவரைக் காண்பதற்காக அவரது ஆதரவாளர்கள் சொகுசு விடுதி முன்பு கூடி வருகின்றன. பெங்களூரில் சசிகலாவை தங்கியுள்ள விடுதிக்கு முன்பாக அதிமுக கொடியுடன் கூடிய கார்களில் சாரைசாரையாக ஆதரவாளர்கள் செல்லும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது.