ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.
சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சசிகலா தரப்பு வக்கீல் அந்த வழக்கை விசாரித்து வருமானவரித் துறையினரிடம் பேசி முடித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி நான்கு ஆண்டு சிறைத்தண்டனை கழித்து சசிகலா விடுதலை ஆக உள்ளார். இந்த விடுதலை தகவலானது, பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, ஆர்.டி.ஐ. மூலம் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் தற்போது இந்தப் பதிலை கொடுத்துள்ளது. மேலும் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் விடுதலையாகும் தேதி தாமதமாகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.