அதிமுக பொதுக்குழுவில் சசிகலா இணைக்கப்படுவாரா ? என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலா சேர்க்கப்படுவாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , ஏற்கனவே கட்சி எடுத்த ஒருமித்த முடிவு என்பது அந்த குடும்பத்தில் யாரையும் சேர்ப்பது இல்லை என்பதாகும். எனவே அந்த முடிவில் ஸ்டராங் ஆக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.