விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று சசிகலா கூற சொல்லியதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க தீவிர ஏற்பாடுகளை அமமுகவினர் செய்து வருகின்றனர்.
இதையடுத்து சசிகலா வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி முறைப்படி விடுதலை ஆக்கியுள்ளனர். தற்போது சசிகலா உடல்நலம் பெற சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் சசிகலா என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். அது என்னவென்றால் “விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன்” என்று சசிகலா கூறியதாகவும், இந்த தகவலை மக்களிடம் செல்லும்படியும் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.