Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான  நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ நடப்பு  டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1245 ரன்களும் , 78 விக்கெட்டும்  கைப்பற்றி அசத்தியுள்ளார். இதையடுத்து  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2200 ரன்களும் ,86 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் .

அதேபோல் 164 ஒருநாள் தொடரில் விளையாடியுள்ள அவர் 2968 ரன்களும் ,199 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார், இந்த நிலையில் 38 வயதான டுவைன் பிராவோ  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அதோடு நடப்பு  டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .இதனிடையே நாளை நடைபெற உள்ள தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் ,வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டி ப்ராவோவுக்கு கடைசி சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |