Categories
உலக செய்திகள்

‘ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’…. இந்த ஆண்டிற்க்கான கருத்து….!!

ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எந்தவொரு நாடுகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’ என்பது இந்த ஆண்டிற்க்கான முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநிலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தனியார் துறை, கல்வி அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்த்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் Corruption Investigation Code (ஊழல் புலனாய்வு குறியீடு) என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. அதில் எந்தெந்த நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது, எந்தெந்த நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் கூறப்படுகின்றன. இதற்கு எதிராக குறிப்பிட்ட அளவில் உலக நாடுகள் எதுவும் கடந்த 15 ஆண்டுகளில் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

குறிப்பாக கையூட்டு அதிகம் வாங்கப்படும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 77வது இடத்தில் இருந்து 82வது இடத்திற்கு சென்றது. மேலும் 194 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகொரியா, துர்க்மெனிஸ்தானில் அதிக அளவு ஊழல் நடைபெறுகிறது. அதே சமயத்தில் டென்மார்க், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளில் மிகக் குறைந்த அளவே ஊழல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |