அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் சொத்து மதிப்பு குறைந்ததற்கான 2 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது.
புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பு 700 மில்லியன் டாலருக்கு அதிகமாகவே சரிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பில் நான்கில் மூன்று பங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகம் தான். கொரோனா என்னும் கொடிய வைரஸால் பல தொழில்கள் முடங்கியது. அதில் டிரம்பின் ரியல் எஸ்டேட் துறையும் கடும் சரிவை சந்தித்தது.
அதனால் டிரம்பின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்தது . டிரம்பின் சொத்து மதிப்பு குறைவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்த டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை வெடித்தது. அந்த வன்முறையினால் டிரம்பின் புரோக்கர்கள் மற்றும் கடன் வழங்கர்கள் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது. இதனால் தான் டிரம்பின் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் மதிப்பு 26% குறைந்தது என்றும் தற்போது அது 1.7 பில்லியன் டாலராக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.