ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி டிராஃபி போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராஃபி தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று தர்மசாலாவில் தொடங்கிய போட்டியில் ஹிமாச்சல் பிரதேச அணியை எதிர்த்து மும்பை அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல் கேப்டன் அன்கித் கல்சி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்குத் தொடக்கமே சோகமாக அமைந்தது. 16 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி அணியைத் தோல்வியிலிருந்து மீட்ட, சித்தேஷ் லேட் – சர்ஃபராஸ் கான் இணை ஜோடி சேர்ந்தது.
இதில் சித்தேஷ் லேட் 20 ரன்களில் ஆட்டமிழக்க, பின் கேப்டன் ஆதித்யா தரே – சர்ஃபராஸ் கான் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒரு முனையில் ஆதித்யா தரே நிதானமாக இன்னிங்ஸை கட்டமைக்க, மறுமுனையில் சர்ஃபராஸ் கான் அதிரடியாக ஆடினார்.
இதனிடையே ஆதித்யா தரே அரை சதம் கடக்க, சர்ஃபராஸ் கான் சதம் கடந்து ஆடினார். இந்த இணை 5ஆவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கேப்டன் தரே 62 ரன்களில் ஆட்டமிழக்க, சுபம் ரன்ஜானேவுடன் ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் கான் இரட்டை சதம் விளாசினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் சர்ஃபராஸ் கான் 213 பந்துகளில் 226 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். மும்பை அணி 372 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் கடந்த போட்டியைப் போல், மீண்டும் முச்சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழைக் காரணமாக ஆட்டம் இப்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது
The covers are on the ground as it rains in Dharamsala.
The Day 2 proceedings of the #HPvMUM game are delayed.
Follow the updates 👉👉 https://t.co/OljC14skZn#RanjiTrophy @paytm pic.twitter.com/R1oI8SYy5A
— BCCI Domestic (@BCCIdomestic) January 28, 2020