Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவல்துறைக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்…. 6 பேர் கைது….!!

சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் பூனாம்பாளையத்தில் சாராயம் காய்ச்ச படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வடக்கிபட்டியை சேர்ந்த 46 வயதான தமன்னான் என்பவர் முள்காட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பானையில் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊறல் போட்டிருந்ததை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து தமன்னானையும் கைது செய்தனர்.

இதேபோன்று உப்பிலியபுரம் பகுதியில் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சதீஷ், மணி, சுப்ரமணி ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்த சாராயத்தையும் கைப்பற்றினர். மேலும் காட்டுக்கோட்டை சேர்ந்த நடேசன், புத்தூர்காவிரி சேர்ந்த மோகனசுந்தரம்  இவர்கள் இருவரும் தோட்டத்திலும், ஆற்றுப்படுகையிலும் சாராயம் காய்ச்சுவதை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.

Categories

Tech |