சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாம்பசிவபுரம் பகுதியில் வசிக்கும் அருள் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை அடுத்து இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.