Categories
அரசியல்

“கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி”….. வழிபடும் முறை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நவராத்திரியின் ஒன்பது நாளுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வணங்குவது நம்முடைய மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். இந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை நாளில் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய நாட்களில் பூஜை செய்து வணங்குவார்கள்.

மேலும் சரஸ்வதி தேவியை கல்வியரசி, நாவிற்கரசி, கலைவாணி என பல பெயர்களை கொண்டு போற்றுவார்கள். பிரம்மனுடைய மனைவிதான் சரஸ்வதி. சரஸ் என்றால் ஒளியையும் நீரையும் குறிப்பிடுவதாகும். கல்வி வளத்தை வற்றாமலும் ஞான ஒளியை அள்ளித் தருபவளாகவும் விளங்குபவளே சரஸ்வதித்தாய். மேலும் நம் தொழிலுக்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாட்களாகும். இன்று முதல் சரஸ்வதிக்கு வழிபாடு தொடங்கியுள்ளது. அந்த வகையில் கண்டியூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, வேதாரணியத்தில் வீணையில்லா சரஸ்வதி, கூத்தனூர் அமைந்துள்ள சரஸ்வதி கோவில், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன.

கல்வி செல்வம் வெற்றிக்கு உடையவளான சரஸ்வதி தேவியை பூஜை செய்யும் உகந்த முறை பற்றி பார்க்கலாம். பூஜையை தொடங்கும் முன் அன்னையை ஆவாகனம் செய்ய வேண்டும். மேலும் சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை அடுக்கி அவற்றின் மேல் சரஸ்வதி தாயை அமரச் செய்ய வேண்டும். பின்பு மறுநாள் விஜயதசமி நாளன்று வழிபட்ட புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்க வேண்டும். அதோடு சரஸ்வதி தேவியை தாழம்பூ, ரோஜா, தாமரை உள்ளிட்ட மலர்களால் பூஜிக்கலாம். மேலும் திராட்சை, நாவல், பேரிச்சை எலுமிச்சை சாதம், பால் சாதம் உள்ளிட்டவற்றுடன் நெய்வேத்தியங்களை படைத்தும் வணங்கலாம். இவ்வாறு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்கினால் நமக்கு வற்றாத ஞானமும் அறிவும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Categories

Tech |