சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா நாட்டில் தெற்கு லுவாலாபா என்னும் மாகாணத்தில் காங்கோ எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை அன்று சரக்கு ரயிலில் சட்டவிரோதமாக பொதுமக்கள் ஏறிச் சென்றுள்ளனர். அந்த ரயில் கின்டேட்டா என்னும் இடத்தை அடைந்த போது திடீரென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 பேரும் தற்போது இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது, இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.