விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டிஒலி சாந்தி எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அசல் வெளியேறியதில் இருந்து நிவாஸினி வருத்தத்துடனே இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் அசல் கோலார் கடலை போட்டு வந்தார். சிங்கப்பூர் மாடல் நிவாஸினி பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் அசலிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார்.
இருவரும் காதலிப்பதாக இணையதளத்தில் கிசுகிசுகள் எழுந்தது. இந்நிலையில் அசலின் பிரிவு குறித்து பிக் பாஸ் வீட்டில் தனியாக அமர்ந்து பேசிய நிவாஷினி, எனக்கு சாப்பாடு இறங்கவில்லை. அசல் ஒண்ணுமே பண்ணவில்லை. இந்த வீட்டில் அவனை தான் எலிமினேட் செய்ய வேண்டுமா?. சாப்பிடும் போது உன் ஞாபகம் தான் வருகிறது. இந்த வீட்டில் எனக்கு ஒன்று என்றால் அசல் தான் ஓடி வந்து என்னிடம் பேசுவான். நான் முழுமையாக சந்திரமுகியாக மாறிக்கொண்டே இருக்கிறேன். சத்தியமா நம்ம பிரண்ட்ஷிப் பற்றி யாருக்கும் புரியாது அசல். டேய் உங்களுக்கு புரியலடா என்று தான் சொல்ல வேண்டும். தூங்கி எழுந்ததும் நான் பார்க்கும் ஒரே முகம் அசல் முகம். இந்த வீட்டில் யாருமே இல்லையா எலிமினேட் செய்வதற்கு. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் அசல் என்று மிகுந்த வேதனையுடன் நிவாஷினி புலம்பி வருகிறார்.