இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று இருசக்கர வாகனங்களை மடக்கி அவர்களைப் பிடித்து போது பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அழகேசன் என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நபர் என்பதும் வனதுறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் 3 கிலோ சந்தனக் கட்டைகளை கடத்தி வந்தது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மூன்று கிலோ சந்தன கட்டை மற்றும் இருசக்கர வாகனத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.