Categories
சினிமா தமிழ் சினிமா

சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை…. பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்…!!

சானியா மிர்சா வாழ்க்கை படத்தில் நடிக்க பிரபல நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி மற்றும் தடகள வீரர் மில்கா சிங் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட உள்ளது.

இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை டாப்ஸி தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை கதை படமான “சபாஷ் மித்து” என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |