சந்தனத்திலிருக்கும் மருத்துவகுணங்கள் சிலர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு அவர்களுக்காக இந்த பதிவு
- சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் நன்றாக உரைத்து அந்த பசையை பூசிவந்தால் வெண்குஷ்டம், படர்தாமரை, முகப்பரு குணமடையும்.
- 1 தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் ரத்த மூலம் சரியாகும்.
- 1 தேக்கரண்டி சந்தனப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காட்சி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குணமடையும்.
- சந்தன துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுப்பெறும், உடல் எடை கூடும்.
- சந்தனப் பொடியை 1 தேக்கரண்டி அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.