Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சண்ட கோழி விராட் “….! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்குலி….!! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் கேப்டன் விவகாரத்தில் விராட் கோலிக்கும் , பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும்  இடையே மோதல் நிலவி வருகிறது. அதேசமயம் ‘டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக’ கங்குலி தெரிவித்திருந்தார் .இதற்கு விராட் கோலி கூறுகையில்,’ என்னிடம் யாரும் அப்படி கூறவில்லை ‘என்று கூறியிருந்தார் .

இதனால் இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் குழப்பம் இருப்பது தெளிவாக தெரிந்தது.  இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்களானகபில்தேவ் மற்றும் மதன் லால் வலியுறுத்தினர். இந்நிலையில் கங்குலியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் கூறும்போது, ‘விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும் . ஆனால் விராட் கோலி நிறைய சண்டையிடுவார் ‘என்று தெரிவித்தார் .இதற்கு முன்பாக விராட்கோலி விவகாரம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கங்குலி மறுத்து வந்தார் .

அதேசமயம் இந்த விவகாரத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார். தற்போது இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து மன அழுத்தத்தையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று  கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கங்குலி கூறும்போது,’ வாழ்க்கையில் எந்த மன அழுத்தமும் இல்லை. மனைவியும் காதலியும் தான் மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள் “இவ்வாறு அவர் கூறினார் .

Categories

Tech |