புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரியர், பேராம்பூர் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை செய்த போது அவர் பாக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார் இதனை தொடர்ந்து டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்த காவல் துறையினர் மணல் கடத்தியதற்க்காக சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.