திருட்டுத்தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றில் நேற்று டிப்பர் லாரி மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து ராணிபேட்டை காவல்துறையினர் வசந்தை கைது செய்தனர். மேலும் மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.