Categories
சினிமா தமிழ் சினிமா

ஓட்டு போட்டத விளம்பரப் படுத்த விரும்பல…. போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமுத்திரக்கனி…!!!

ஓட்டு போட்டதை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பல திரை பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். ஆனால் சில திரைப்பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தவில்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அதில் சமுத்திரக்கனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஆகையால் இதுகுறித்து பேசிய சமுத்திரக்கனி, “நானும் என் மனைவியும் 6:55 மணிக்கே ஓட்டுச் சாவடிக்கு சென்று விட்டோம். அங்கு வாக்களிக்கும் இயந்திரம் பழுதாகியதால் 40 நிமிடம் காத்திருந்து முதல் ஆளாக ஓட்டு போட்டு விட்டு வந்தோம். அதனை நான் விளம்பரம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிய அவர் ஓட்டு போட்ட விரல் மையுடன் கூடிய ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |