Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட மக்கள் …பேரம்பாக்கம் பஜாரில் அலைமோதிய கூட்டம் …!!!

திருவள்ளூர் பேரம்பாக்கம் பஜார் வீதிகளில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனர்.

தமிழகத்தில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றை  கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி  நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா , முழு ஊரடங்கு  அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நேற்றும், இன்றும்( ஞாயிற்றுக்கிழமை)காலை 6 மணி முதல் 9 மணி வரை ,அனைத்து கடைகளும் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், நேற்று முதலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், கடைகளின் முன் மக்கள் கூட்டம் கூட்டமாக ,பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முதல் பேரம்பாக்கம் பஜார் பகுதிகளில் உள்ள    காய்கறி,மளிகை கடைகளில்,300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,  கூட்டம் கூட்டமாக கூடினர். இதுகுறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டரான கண்ணையா உத்தரவின் பேரில் ,சப்-இன்ஸ்பெக்டர்  சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கடைகளில் கூடியிருந்த, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதோடு கடைகளில் அதிக கூட்டத்தை கூடிய ,கடைக்காரர்களுக்கு ரூபாய் 8 ஆயிரம்  அபராதம் விதித்து எச்சரித்தனர். இதை தொடர்ந்து  பேரம்பாக்கம் பஜார் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியே முக  கவசம் அணியாமலும் ,தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்  30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் பேரம்பாக்கம் பஜார் வீதிகளில் வாகனங்கள் செல்லாதபடி, இரண்டு பகுதிகளிலும் இரும்பு தடுப்புகளை அமைத்து சாலைகளை முழுவதுமாக போலீசார் அடைத்தனர்.

Categories

Tech |