நடிகை சமந்தா தனது இணையதள பக்ககளில் இருந்து நாக சைதன்யாவை நீக்கியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார்.
சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதை உண்மையாக்கும் வகையில் சென்ற வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. விவாகரத்திற்கு பின்னர் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சமந்தா நாக சைதன்யாவையும், நாக சைதன்யா சமந்தாவையும் அன் பாலோ செய்துள்ளார். விவாகரத்து செய்து கொள்ளும் போது இருவரும் எங்களுக்குள் நட்பு தொடரும் என்று அறிவித்திருந்தனர். தற்போது இவர்களின் இந்த செயலால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.