Categories
டெக்னாலஜி

“பாதுகாப்புக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்”…. இணையத்தில் லீக்கான பயனர்களின் விவரங்கள்…. குறித்து தகவல் வெளியிட்ட சாம்சங் நிறுவனம்….!!!!

பயனர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து சாம்சங் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் சாம்சங் நிறுவனத்தின் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களான பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இதை விட மிக முக்கிய தகவல்களான credit card மற்றும் debit card விவரங்கள் பாதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் பற்றி சாம்சங் நிறுவனம் வெளிப்படையாக தகவல் வெளியிட்டுள்ளது. அதில் “பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நாங்கள் துவங்கிவிட்டோம்.

சாம்சங்-ஐ பொருத்தவரை பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். நாங்கள் சமீபத்தில்தான் ciber security சம்பவத்தை கண்டறிந்து இருக்கிறோம். இதில் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜூலை 2022 மாதத்தில் samsung america systemகளில் இருந்து தகவல்களை இயக்கி இருக்கின்றன. மேலும் ஆகஸ்ட் 4, 2022 வாக்கில் சில பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தோம்” என சாம்சங் தனது வலைதள பதிவில் தெரிவித்து இருக்கிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிஸ்டம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ciber security system ஒன்றை நியமித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க பயனர்கள் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர். இவர்களின் social security numbers, credit, debit card numbers எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பெயர், தொடர்பு விவரம், பிறந்த தேதி, சாதனம் பதிவு விவரம் உள்ளிட்டவை வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Categories

Tech |