Categories
டெக்னாலஜி பல்சுவை

TV மட்டுமல்ல…! ”இதையும் வாங்கிக்கோங்க” அசத்திய சாம்சங் ….!!

தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது 

சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள்  பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. பொருட்களின் மதிப்பை உணர்ந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்த சாம்சங் தற்போது ஃப்ரேம், தி செரிஃப், செரோ, போன்ற ரகங்களுக்கு மட்டுமே முதலில் இந்த வழிமுறையை கையாள இருப்பதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |