டி20 உலக கோப்பை போட்டி வருகிற 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் அணியை அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இத்தொடருக்கான ஆலோசகராக செயல்பட சம்பளம் வேண்டாமென தோனி கூறியதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார் அதேபோல் செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட தோனி சம்பளம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.