தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். காதல் கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து வந்த சமந்தா தற்போது திரில்லர் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்து உள்ளார். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கதைகளமாக கொண்டுள்ளனர்.
இந்த படத்திற்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி சமந்தா நடத்தி இருக்கிறார் என்று சமீபத்தில் படத்தின் இயக்குனர்கள் கூறியிருந்தனர். இந்தப் படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், மலையாள நடிகர் உன்னி முகந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வருகின்ற 27 ஆம் தேதி மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.