முன்னணி நடிகை சமந்தா ஏழைப் பெண் ஒருவருக்கு தனது சொந்த செலவில் கார் வாங்கி கொடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின்போது பெண் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டுவதாகவும், தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும், தன்னுடைய வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கூறி தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைக் கேட்ட சமந்தா அந்தப் பெண்ணுக்கு தனது சொந்த செலவில் கார் ஒன்று வாங்கி தருவதாகவும் அதனை வைத்து டிராவல்ஸ் நடத்தி நல்ல வருமானத்தை ஈட்டிக் கொள்ளுங்கள் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அப்பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்து தான் அளித்த வாக்கை காப்பாற்றி உள்ளார். இதனால் ஏழை பெண்ணின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவருக்கு உதவிய நடிகை சமந்தாவிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.