Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சலூன்கள் திறக்கலாம்… மே 20 முதல் பார்சல் முறையில் மதுவிற்பனைக்கு அனுமதி: மாநில அரசு!

கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை விற்க அனுமதி வழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, ஒவ்வொரு மாநில அரசுகளும் கடைபிடிக்கவேண்டிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவிலும் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முறை தயாரான பிறகு பெவ்கோ மதுபான கடைகளை அரசு திறக்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மதுக்கடைகளில் கவுண்டர்களில் மட்டுமே மது வாங்க வேண்டும் எனவும், கிளப்களில் உணவு மற்றும் மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சலாக விற்கலாம் என அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 630 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 130 பேர் உள்ளதாக முதல்வர் பினாரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |