சல்மான்கான் தனது சொந்த குதிரை விற்க இருப்பதாக கூறிய மோசடிக்காரர்களிடம், ஒரு பெண் 12 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் குதிரை மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் குதிரையுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது பண்ணை வீட்டில் குதிரைகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்பாய் சிங், ராஜ்ப்ரீத் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு பெண்ணிடம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் படத்தை காட்டி இந்த குதிரையை விற்பதற்கு தயாராக உள்ளார் என கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் முதலில் நம்பவில்லை. அந்த மூன்று மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணின் மனதை மாற்றி அவரை நம்ப வைத்துள்ளார்.
மேலும் அதை வாங்கி சல்மான்கானின் குதிரை என்று நீங்கள் மற்றவரிடம் விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று பணத்தாசையும் தூண்டியுள்ளன. அந்தப் பெண் 12 லட்சம் கொடுக்க சம்மதம் தெரிவித்த உடன் அவர்களிடம் இருந்து 12 லட்சம் ரூபாயை அந்த மூன்று பேரும் வாங்கிக் கொண்டனர். ஆனால் குதிரையை ஒப்படைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் உயர் நீதிமன்றத்தை நாடி, நேர்மையாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட முறையிட்டார். சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கமிஷனர் இது குறித்து புகாரளிக்கவும், துணை கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.