Categories
சினிமா தேசிய செய்திகள்

சல்மான் கான், சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் Twitter தரவுகள் திருடப்பட்டதா….? ஹேக்கரின் எச்சரிக்கையால் பரபரப்பு….!!!!!

பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்களின் டுவிட்டர் தகவல்களும் திருடப்பட்டிருப்பதாக ஹேக்கர் பட்டியல் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் திருட்டு உண்மையானதாக இருப்பின் டுவிட்டர் அதற்கு மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கேலின் கூறி இருக்கிறார்.

Categories

Tech |