தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட முதல் நாளே மது பிரியர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முண்டியடித்து மது வாங்க ஆர்வம் காட்டியதால், உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவு போட்டது.
பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் மதுக்கடைகளை திறந்து, டோக்கன் வழங்கி, காவல் துறையினரை வைத்து வரிசையை ஒழுங்குப்படுத்தி தமிழக அரசு மது விற்பனையை நடத்தியது. முதல் 2 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது டாஸ்மாக்..
தற்போது சிறு தொழில்களில் தொடங்கி, கட்டுமானம், உற்பத்தித் துறை என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. இதனால் டாஸ்மாக் மதுகடைகளில் பீர் விற்பனை 42 சதவீதம், இதர மது வகைகள் விற்பனை 12 சதவீதம் என 57 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம் மதுபிரியர்கள் திருந்தி விட்டார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது..