Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா”… பள்ளி மூடல்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. பத்து மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் முடிவை பெற்று தற்போது பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு தான் உறுதிசெய்யப்பட்டுள்ளது, சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் மாணவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் இருந்த சக மாணவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில்: “ஊரில் இருக்கும் போது மாணவன் பரிசோதனை எடுத்துள்ளார். பள்ளிக்கு வந்ததும் உறுதியாகியுள்ளது. பள்ளி மூலம் கொரோனா பரவவில்லை. மாணவர்கள் பயின்றுவரும் பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மாணவருக்கு உறுதியானதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |