சாலையில் அடுத்தடுத்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ்க்கு அகிலேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி டேங்கர் லாரி ஒன்று ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசு பேருந்து லாரி மீது மோதியது. அப்போது பேருந்துக்கு பின்னால் வந்த தாய் சேய் நல உறுதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.