காஞ்சிபுரத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தை அடுத்த பத்தேரி பகுதியை சேர்ந்த ஒருவர் காஞ்சிபுரத்தில் உள்ள சாத்தான் குட்டை தெருவின் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் இருக்கை பகுதியில் இருந்து புகை வரவே வண்டியை நிறுத்தி பார்த்த போது தீப்பற்றி எரிந்தது. வண்டி தீப்பற்றி எரிவதை கண்டு அலறி அடித்து சாலையில் இருந்து ஒதுங்கி செய்வதறியாது திகைத்து நின்றார். இருசக்கர வாகனம் எரிவதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் அப்பகுதிவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளனர்.
தீயை யாரும் அணைக்க முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தீ மளமளவென பரவிய இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலானது. இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்க முடியாமல் வாகனத்தை ஓட்டி வந்தவர் முற்றிலும் எரிந்து போன வாகனத்தை ரிக்ஸாவில் எடுத்துச் சென்றுள்ளார்.