Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க…. பாசி பயிறு சாலட்…!!

புரதச்சத்து நிறைந்த பாசிப்பயிறு சாப்பிடுவதனால் உடல் எடை அதிகம் குறையும் வாய்ப்புகள் உள்ளது அதிலும் பாசிப்பயிரை முளைகட்ட வைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு மேலும் ஆரோக்கியம் கிடைக்கப்பெறும் பாசிப்பயிறை சாலட்டாக செய்வது எப்படி எனும் தொகுப்பு

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு                       –      1 கப்

தக்காளி                               –      2 கப்

பச்சை மிளகாய்              –     2

வெள்ளரிக்காய்               –     2

ஆரஞ்சு                                 –     2

கொத்தமல்லி                    –     2 மேசை கரண்டி

எலுமிச்சை சாறு              –     2 மேசைக்கரண்டி

மிளகுத் தூள்                      –     1 தேக்கரண்டி

உப்பு                                       –     2 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய்          –     2 மேசைக்கரண்டி

சர்க்கரை                              –    2 தேக்கரண்டி

இஞ்சிச்சாறு                        –    2 மேசைக்கரண்டி

சீரகம்                                      –    2 தேக்கரண்டி

செய்முறை

  • பாத்திரம் ஒன்றில் கால்  அளவு தண்ணீர் ஊற்றி முளைகட்டிய பயிறு அதனுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், சீரகப் பொடி, மிளகு தூள், சர்க்கரை, இஞ்சி சாறு மற்றும் உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பயிறு வெந்தவுடன் கலந்து வைத்த கலவையை பயிருடன் சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு முதலியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டால் பாசிப்பயிறு சாலட் தயார்.

Categories

Tech |