Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக வைகோ தன்னை யாராவது கொலை செய்து விடுவார்களோ என்ற மரண பயத்திலேயே ஒவ்வொரு பொழுதையும் கழித்தார்.

இந்நிலையில் வைகோ கடந்த மாதம் 26-ஆம் தேதி மனைவியை காண்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சிலர் வைகோவின் வீட்டிற்குள் நுழைந்து சிலர் அவரின் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதோடு கணவரை காப்பாற்ற முயன்ற மனைவிக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதன் பின் அங்கிருந்து மர்மகும்பல் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர்.

அப்போது விஜய் மற்றும் ராகவேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், மற்ற கூட்டாளிகளான கோபால கண்ணன், குமார், சக்தி, விஷ்ணு மற்றும் ரத்ன சபாபதி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதில் வைகோவுக்கும், ரத்தினசபாபதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

அதோடு கஞ்சா விற்பனை செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகோ, ரத்தினசபாதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதை தெரிந்து கொண்ட ரத்தின சபாபதி மற்றும் கூட்டாளிகள் வைகோவுக்கு முன்பே அவரை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டி வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் காவலரை தாக்கிய ரவுடி சச்சின் என்பவரை காவல் துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். இவருக்கும் வைகோவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |