பலத்த கனமழை காரணத்தினால் சாலையில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் மேம்பாலம் அருகாமையில் இருக்கும் 4 முனை சந்திப்பு பகுதியிலும், சி.எல்.ரோடு பகுதியிலும் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலைகளில் வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது.
இதனை அடுத்து வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ-மாணவிகள் வெள்ள நீரில் சிக்கி அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.