சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொத்தமல்லி கீழ அக்ரஹாரத் தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனது காரில் உறவினர் ஒருவருடன் பாபநாசம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பழைய பேட்டை கிருஷ்ணாபேரி வழியாக சென்ற நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காசிராஜன் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மீட்டு வாகனம் வரவழைக்கப்பட்டு குளத்தில் இருந்த காரை அப்புறப்படுத்தியுள்ளனர்.