Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் முகாமிட்ட யானைகள்…. தூரத்தில் நின்ற வாகனங்கள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

சத்தியமங்கலம் பண்ணாரி அருகில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பெரும்பாலான யானைகள் இருக்கின்றது. இந்த யானைகள் தண்ணீர் மற்றும் உணவிற்காக அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானைகள் தனது குட்டிகளுடன் வெளியேறி சாலை ஓரத்தில் சுற்றி தெரிந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த சோதனை சாவடி அருகில் யானைகள் வந்து சாலையில் முகாமிட்டது.

இதனைப் பார்த்ததும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தூரத்தில் நிறுத்திக் கொண்டனர். இதனையடுத்து யானைகள் சுமார் 40 நிமிடங்கள் சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து பின் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியபோது அடிக்கடி யானைகள் சாலையில் வந்து நின்று விடுகிறது. இதனால் பண்ணாரி சாலையில் வாகனங்களில் வருபவர்கள் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் வாகனங்களை நிறுத்தி யாரும் யானைகளை தொந்தரவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |