‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
‘கே ஜி எஃப்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கவுள்ளார் .
I'm glad and happy to announce that my next venture is "SALAAR". I am very excited to be a part of this wonderful project #SALAAR. Thank you so much @prashanth_neel Sir, @VKiragandur Sir, and @hombalefilms for giving me a great opportunity.
– Madhu Guruswamy via FB #Prabhas pic.twitter.com/zauAn77Q1L
— Prabhas World (@Prabhas_Team) February 6, 2021
இந்நிலையில் ‘சலார்’ படத்தில் நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் மது குருசாமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் மது குருசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . இவர் கன்னடத்தில் வெளியான முஃப்தி ,வஜ்ரகயா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .