பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடு விதிகளும் அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பல திரை பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவர் தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதனுடன், “நான் என் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். Covid-19 அபாயங்களைத் தவிர்க்க மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ssakshiagarwal/status/1389161755855654912