பிரபல நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.
இதை தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சாய்பல்லவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவே ஆகும் என்று தெரியவந்துள்ளது.