சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது.
அதிரடி ஆக்சன் நிறைந்துள்ள படமாக இருப்பதனால் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகிய சிலமணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் எனும் இணையதளத்தில் வெளியானது. இச்சம்பவம் படக்குழுவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..