தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செல்வ நிலை உயரும் நாளாக இருக்கும். திடீர் முன்னேற்றம் ஏற்படும். பாசத்தோடு பழகியவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல் தான் இருக்கும். மேலிடத்தை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. இன்று வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சின்ன பூசல்கள் இருக்கும். பேசும் போது நிதானமாகப் பேசுங்கள் வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம். அதேபோல தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று சொத்து சேர்க்கை ஏற்படும். அதாவது வாகனம் வாங்க கூடிய யோகம், வீடு வாங்க கூடிய யோகம் போன்றவை ஏற்படக்கூடும் .இந்த முயற்சி உங்களுக்கு நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்