Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “பொறுமையை கடைபிடிக்க வேண்டும்”.. முன்கோபத்தை குறையுங்கள்.!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகன பழுதுகளால்  வாட்டம் காண்பீர்கள். அதாவது செலவுகள் இன்று அதிகமாக தான் இருக்கும். அனாவசிய செலவுகள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்ககை  வேண்டும்.

வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே ஓரளவு ஒற்றுமை இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் இல்லத்தில் நடக்கும். இன்று முக்கியமான பணியை மட்டும் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது போலவே இன்றைய நாள் சிவராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேர கிரிவலம் என்றால் குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள்.

இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கும் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் முடிந்த அளவிற்கு நாம் திரு . அண்ணாமலையாரையும் குபேரரையும் தரிசித்து கிரிவலம் செல்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து6: 30 மணிக்குள் குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு. உங்களுடைய வாழ்க்கையில் செல்வ நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த வழிபாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். தயவுசெய்து கூடுமானவரை முயற்சி செய்யுங்கள் அது போதும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |