Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு காவி உடை…. மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை…!!

திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து  சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.

திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்றும்,  தமிழ் பற்று மிக்க எவராலும் பிற்காலத்தில் இந்த செயலை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து அவமதித்ததாக பாஜகவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தது வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |