சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால்,
மக்கள் மத்தியில் ஒரு விதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவது நம் மனதை உருக்க கூடிய ஒரு விஷயமாகவும், வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. சென்னையில் மட்டும் 196 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ராயபுரம் RSRM மருத்துவமனையில் 70 கர்ப்பிணிப் பெண்களும், திருவல்லிக்கேணி மருத்துவமனையில் 29, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 என்ற எண்ணிக்கையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு கொரோனா என்ற செய்தி தமிழக மக்களிடையே மனதை உலுக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது.