Categories
சினிமா

“பிரபல இசையமைப்பாளரை சந்தித்த சச்சின்” யாரை தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி 400 கோடி ரூபாய் வரி வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் நடிகர் சிம்புவின் பத்து தல, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் போன்ற திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர் ரகுமான் நண்பர்களின் இலக்கு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர் இசை புயலுடன் ஒரு அருமையான நாள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சச்சின் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றனர்‌.

Categories

Tech |