Categories
அரசியல்

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு….. 6 கட்டங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில்  இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில்  டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். எனவே சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக 13,000 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |